Sunday, August 24, 2014

மனநல குறைபாடு 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கிறது இந்தோ-திபெத்தியன் படை

சீனாவிற்கு எதிராக முன்னணி போர் படையாக விளங்கும் நாட்டின் இந்தோ-திபெத்தியன் படை சுமார் 100க்கும் மேற்பட்ட படை வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறது. அவர்கள் மனநல குறைபாடால் பாதிக்கப்பட்டதன் காரணமாக ஓய்வு அளிக்கப்படுகிறது. தீரா அல்சைமர் நோய் உட்பட பல்வேறு வகை மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறும் துணை ராணுவ படைவீரர்கள் மிகவும் தீவிரமான ஆபத்தை ஏற்கொள்ள கூடும் என்று படை எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச எல்லையில் முக்கியமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment