பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இது அரையிறுதி தேர்தலாக கருதப்படும் இந்த தேர்தலில் மகா கூட்டணி 6 தொகுதியை கைப்பற்றியுள்ளது. 9 தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 6 தொகுதிகளை மட்டுமே 3 கட்சிகள் இணைந்த கூட்டணி வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment