காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதால், இந்தியா பாகிஸ்தான் இடையிலான வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என இந்தியா அறிவித்தன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு மோடி அரசு தகுந்த செய்தி அனுப்பியுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார். தெலுங்கானாவில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா மேலும் கூறியதாவது: -பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் எப்போதுமே அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் எந்த அரசுக்குமே அதை தடுத்து நிறுத்தும் தைரியம் இல்லை. நீங்கள் பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் எங்களுடன் பேச்சு வார்த்தை முடியாது என மோடி அரசாங்கம் பாகிஸ்தானுக்கு தகுந்த செய்தி வழங்கியுள்ளது. இதை பாரதீய ஜனதா பிரதமர்தான் செய்தார் என்பதை நான் பெருமையாக கூறுகிறேன்.
No comments:
Post a Comment