இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை எஸ்.சேனாதிராஜா, சுரேஷ் பிரேம சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜ் மற்றும் செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் நேற்று காலை டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.அப்போது இலங்கை தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு கிடைப்பது குறித்தும், 13-வது அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.மேலும், இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும், இது தொடர்பாக நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment