கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஹேமந்த் சோரன் பேசுகையில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பட்டது.இந்த நிகழ்வை ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜார்கண்டில், மத்திய மந்திரி நரேந்திர தோமர் ஏர்போர்ட் வரும் போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கு பாரதீய ஜனதா கட்சியினருக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment