சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் பரப்பனஅக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறையில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் சுதாகரனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Read more at http://ift.tt/1DM96o1