Monday, September 29, 2014

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் இந்த வருடம் ஜூலை வரையில் குழந்தைகளுக்கு எதிரான 427 கற்பழிப்பு வழக்கு உள்பட கேரளாவில் 1,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 13 குழந்தை திருமண வழக்கு, 69 கடத்தல், 23 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 637 கற்பழிப்பு வழக்கு உள்பட 1,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான 8.674 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 637 கற்பழிப்பு மற்றும் 2760 பாலியல் தொல்லை வழக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். கணவன் மற்றும் உறவினர்கள் கொடுமை தொடர்பாக 3,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் அதிகமாக 7 மாதங்களில் 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 773 வழக்குகள் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://ift.tt/1npqQkd

No comments:

Post a Comment