காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மக்களுடன் உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர். "காங்கிரஸ் கட்சி உங்களுடன் உள்ளது. நாங்கள் உங்களுடைய பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்வோம். எந்தவழியில் எல்லாம் உங்களுக்கு உதவி செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்." என்று ராகுல்காந்தி தெரிவித்தார். தெக்ருனா கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய போது ராகுல் இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment