திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25 ந் தேதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுவனை பள்ளிக் கூடத்தில் இருந்த நாய் கூண்டுக்குள் 3 மணி நேரம் அடைத்து வைத்தார். இதையறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
No comments:
Post a Comment