எல்லையில் சீனாவின் ஊடுருவலை மத்திய அரசு ஒருபோதும் ஏற்காது என்றும் இந்திய பகுதிகள் பாதுகாக்கப்படும் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ஊடுருவல் சம்பவம் நடைபெற்று வருகிறது. நமது எல்லையில் அவர்களின்(சீன ராணுவம்) ஊடுருவலை இனி ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்த முறை மிகவும் தெளிவாக தெரிவித்துவிட்டோம். இனி ஏற்றுக் கொள்ள மாட்டோம். என்று கூறியுள்ள மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ எல்லையில் அமைதி நிலவுவதையே இந்திய அரசு விரும்புகிறது என்று வலியுறுத்தியுள்ளார். எல்லையில் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment