Monday, September 29, 2014

மேகாலயா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

மேகாலயா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு 52 பேர் பலியாகினர் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். "மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் இதுவரையில் 52 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பலர் காரோ மலை பகுதியை சேர்ந்தவர்கள். சாலைகள், வீடுகள், விவசாய நிலம் என சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. என்று துணை முதல்-மந்திரி லாலோ தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடித்து வருகிறது என்று தெரிவித்துள்ள லாலோ, வெள்ள சேதாரம் குறித்தான முழு அறிக்கைக்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அம்மாநில முதல்-மந்திரி முகுல் சங்மா ரூ. 2 ஆயிரம் கோடி நிதி உதவி செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட காரோ மலைப்பகுதியில் வெள்ளம் வடிந்து வருவதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் படிப்படியாக வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment