குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த நான்கு நாட்களாக இரண்டு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்றுவரையில் அசம்பாவித சம்பவம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலையே நிலவியுள்ளது. மாவட்டத்தின், யாகுத்புரா, பஞ்ராபோல், பாதேக்புரா மற்றும் கம்பார்வாடா பகுதியில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் சில தரக்குறைவான பதிவுகள் வெளியானதே மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அங்கு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment