Monday, September 29, 2014

பொதுமக்கள் 12 பேரின் தலையை வெட்டி தீவிரவாதிகள் வெறியாட்டம்

இதுதொடர்பாக மாகாண துணை போலீஸ் தலைமை அதிகாரி அப்துல்லாக் என்சாபி கூறுகையில், அர்ஜிஸ்தான் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகள் பல்வேறு கிராமங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு அவர்கள் பிடித்து வைத்திருந்த 12 பேரை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர். அவர்கள் வீடுகளை தீ வைத்து எரித்துள்ளனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்துள்ளார். போலீசார் தங்கியிருந்த முகாம் அருகே தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். அந்த முகாமில் 40 போலீசார் இருந்தனர். சேதம் குறித்தான தகவல்களை பெற உடனடியாக அப்பகுதிக்கு செல்வது என்பது முடியாதது. அப்பகுதியில் இருந்த சாலைகளை தீவிரவாதிகள் தகர்த்துள்ளனர். என்று என்சாபி தெரிவித்துள்ளார்.

http://ift.tt/ZW8AEn

No comments:

Post a Comment