Tuesday, September 30, 2014

நில ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குஜராத் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா. அவர் கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அம்மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அந்த பணிக்காலத்தின்போது, விதிமுறைகளை மீறி, ஒரு அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனிக்கு மிகக்குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார். இதனால் மாநில அரசுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதற்கு பிரதி உபகாரமாக, பிரதீப் சர்மாவின் மனைவிக்கு அந்த கம்பெனி ரூ.30 லட்சம் லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment