ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார கோர்ட் வளாகத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். தனி நிதிமன்ற நீதிபதி டி.ஹுன்கா இந்த தீர்ப்பை வழங்குகிறார். தீர்ப்பை அறிய பரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,.தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.தீர்ப்பு 1 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்ததாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்ப்பு வெளியாவதையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
http://ift.tt/1ngpEjb
http://ift.tt/1ngpEjb
No comments:
Post a Comment