மேற்கு டெல்லியின் ஹரிநகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு பள்ளியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சிறுமியை பள்ளியின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது உடலில் இருந்த காயம் மற்றும் தொடர்ந்து சிறுமி அழுததை அடுத்து பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் வெளியானதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் உரிமையாளரை அடித்து உதைத்தனர். காலை பள்ளியின் முன் அவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நெஞ்சை பதபதைக்க செய்துள்ளது. ஹரிநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read more at http://ift.tt/1rjvIrP
Read more at http://ift.tt/1rjvIrP
No comments:
Post a Comment