செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் விண்வெளியில் 324 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்தது. நீள்வட்டமான அந்த பாதையில் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
Read more at http://ift.tt/1CrpFUC
Read more at http://ift.tt/1CrpFUC
No comments:
Post a Comment