Tuesday, September 30, 2014

காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்த திட்டங்களை பாரதீய ஜனதா கொண்டு வருகிறது - மல்லிகார்ஜுன கார்கே

ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடுகள் கொண்டு வர முடிவு செய்தபோது பாரதீய ஜனதா கட்சி இது பேர ஆபத்து என கூறி போராட்டம் நடத்தியது. பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளி செய்தனர். அப்போது பாரதீய ஜனதா கட்சியுடன் சில கட்சிகளும் இணைந்து குரல் தந்தனர். ஆனால் தற்போது ரெயில்வே துறை மட்டுமின்றி அனைத்து பொதுத்துறைகளிலும் அன்னிய முதலீட்டை பெரும் அளவு அனுமதிக்க உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்து செயல்படுத்துகிறது. ஆனால் எந்த கட்சியும் கேட்கவில்லை. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தபோது பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்த்தது ஏன்? இதை கேட்க எங்களுடன் வேறு கட்சிகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment