பெண்ணை கொன்ற வழக்கில் ‘சயனைடு’ மல்லிகாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து சிந்தாமணி விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் நகை, பணத்திற்காக வீடுகளில் தனியாக இருந்த பெண்களுக்கு ‘சயனைடு’ கொடுத்து கொலை செய்து வந்தவர் ‘சயனைடு’ மல்லிகா என்கிற கெம்பம்மா. இவர் மீது மாநிலத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேப் போல் கடந்த 2006–ம் ஆண்டு டிசம்பர் 7–ந்தேதி ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணா தாலுகா துட்ட கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்பவர் சிந்தாமணியில் ‘சயனைடு’ கொடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment