Tuesday, September 23, 2014

என்கவுண்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு புதிய கட்டுப்பாடு; உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 1999ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து என்கவுண்ட்டர் வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம். என்கவுண்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். என்கவுண்டர் வழக்கை மாநில சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும். மஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் இருக்கும் போலீசுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது. என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


No comments:

Post a Comment