Monday, September 22, 2014

டெல்லியில் முக்கிய சாலைகள், மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட அஜித் சிங் உள்ளிட்ட ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். டெல்லியில் புதிய அரசு ஆட்சி அமைத்ததும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள சபரானந்த சோன்வாலுக்கு அஜித் சிங் வசித்து வரும் 12, துக்ளக் சாலையில் உள்ள பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 1973-ஆம் ஆண்டு முதல் அந்த பங்களாவில் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான மறைந்த சரண் சிங் காலம் தொட்டு, தான் வசித்து வருவதால் அதைக் காலி செய்ய முடியாது என்று அஜித் சிங் கூறினார். மேலும், பங்களாவை தனது தந்தை சரண் சிங் நினைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment