Monday, September 22, 2014

செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நாளை ‘மங்கள்யான்’ நுழையும் வாய்ப்பு அதிகரிப்பு முக்கிய என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது

செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நாளை ‘மங்கள்யான்’ விண்கலத்தை செலுத்தும் முக்கிய என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது. இதனால் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் நுழையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ரூ.460 கோடி செலவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ‘மங்கள்யான்’ விண்கலம், வினாடிக்கு 22.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து வருகிறது. 10 மாதங்களுக்கு மேலாக பயணம் செய்து, தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கி உள்ளது. அதை வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவது முக்கியமான பணி ஆகும்.


No comments:

Post a Comment