Monday, September 22, 2014

சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்க காஷ்மீருக்கு ரூ.200 கோடி நிதி உதவி நிதின் கட்காரி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க ரூ. 200 கோடி அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள அனைத்து நதிகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்திற்கு 270-க்கும் மேற்பட்டோர்கள் பலியானார்கள். மாநிலத்தில் 2,000–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் காஷ்மீர் பலத்த சேதம் அடைந்தது. ராணுவ வீரர்கள் தவிர மற்ற யாரும் மீட்பு பணியில் ஈடுபடாத நிலைமை ஏற்பட்டது. வெள்ளத்தினால் கடுமையான பாதிப்பை சந்தித்த ஜம்மூ காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.


No comments:

Post a Comment