அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கும் சிறப்பை பெறுகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியில் கடந்த 1824–ம் ஆண்டு தனியாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டோரின் காலத்தில் அவர்களின் தனிப்பட்ட விவாதத்துக்காக பயன்படுத்தப்பட்டது. 2–ம் உலகப் போருக்குப்பின் இந்த மாளிகையை எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசு, இதை அதிபரின் விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தி வருகிறது. ‘பிளேர் மாளிகை’ என அழைக்கப்படும் இந்த மாளிகை கடந்த 190 ஆண்டுகளாக அமெரிக்க அரசியல், தூதரக, கலாச்சார வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
No comments:
Post a Comment