காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள அனைத்து நதிகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்திற்கு 270-க்கும் மேற்பட்டோர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. குவைத்தில் இந்திய பள்ளி மாணவர் டி.ஆர். பிரத்யூசா, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ. 2 லட்சம் நிதியை திரட்டியுள்ளார். பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவரான பிரத்யூசா 1001.250 குவைத் டினரை (ரூ. 2,12,489) திரட்டியுள்ளார்.
No comments:
Post a Comment