மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் கூட்டணி கட்சிகளான சிவசேனா– பா.ஜனதா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தலா 135 தொகுதிகளில் சிவசேனாவும், பா.ஜனதாவும் போட்டியிட வேண்டும், எஞ்சிய 18 தொகுதிகளை கூட்டணியின் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது. ஆனால் பா.ஜனதாவுக்கு 119 தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் சிவசேனா 151 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment