டெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலியை மாணவர் ஹிமான்சு பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. மதியம் 1:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர் புலி அடைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே சென்றபோது புலி அவரை அடித்து இழுத்து சென்றது என்று அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். புலியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தடுப்புக்கள் மிகவும் குறைந்த உயரமாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பின் உயரம் குறைவாக இருந்ததால் மாணவரை புலி இழுத்து சென்றது என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. மாணவர் புலிக்கு பயந்து இருப்பது போன்றும் பின்னர் அவரை புலி அடித்துக் கொல்வது போன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி உயிரியல் பூங்காவின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment