மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நீரிழிவு நோய்க்காக இம்மாத தொடக்கத்தில் டெல்லி ஆஸ்பத்திரியில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 10–ந் தேதி அவர் வீடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய உடல் பரிசோதனைக்காக அவர் சமீபத்தில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் அவர் சிகிச்சை பெற்றும் வரும் மருத்துவமனைக்கு நேற்று இரவு 9:45 மணிக்கு பிரதமர் மோடி சென்றார். அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி சுமார் 40 நிமிடங்கள் அருண் ஜெட்லியிடம் பேசினார். அப்போது அவரது நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் வருகையையொட்டி நேற்று இரவு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment