10 புகைப்படங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்படுகிறது. என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மங்கள்யான் விண்கலத்தின் வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகள் அடங்கிய, பத்து வண்ணப் புகைப்படங்களை மங்கள்யானை எடுத்து அனுப்பியுள்ளது. புகைப்படங்களை, பிரதமர் நரேந்திர மோடியிடம் காண்பித்த பிறகு அவை ஊடகங்களுக்கு வழங்கப்படும். என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.
No comments:
Post a Comment