Sunday, September 28, 2014

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல். தத்து பதவி ஏற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம். லோதா நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக 63 வயது எச்.எல்.தத்துவை மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, தத்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


No comments:

Post a Comment