Sunday, September 28, 2014

தீர்ப்பு இறுதி இல்லை அ.தி.மு.க. கூட்டணி

சொத்து குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் தீர்ப்பு இறுதி இல்லை என்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற்று வெளிவருவார் என்றும் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. "தீர்ப்பு இறுதியானது இல்லை. முதல்வர் ஜெயலலிதா தடைகளை சட்ட நடைமுறைகள் மூலம் உடைப்பார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. நல்லாட்சியை தொடரும்." என்று கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment