பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது. நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment