கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரியை தேசிய புலனாய்வு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்பாக்கம் அனுமின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தன்னைப்போல் உளவாளிகள் 3 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடந்த வருடம் மண்ணடியில் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உளவு பார்த்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன. இவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment