Thursday, September 25, 2014

'முதலில் இந்தியாவை வளர்ப்போம்' எப்.டி.ஐ.க்கு பிரதமர் மோடி புது விளக்கம்

இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம் முழுவதும் அறிய செய்யும் வகையில் "மேக் இன் இந்தியா" என்ற பெயரிலான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மத்திய வர்த்தகதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உரிமங்கள் வழங்குவதை எளிதாக்கி, விதிகளை தளர்த்துவதன் மூலம் தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment