Thursday, September 25, 2014

மோடி அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது

"காங்கிரஸ் மக்களுடன் தொடர்பு கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டது. இளைஞர்கள் வாட்ஸ்அப் சேவையை பெற வலியுறுத்துகிறேன். பாரதீய ஜனதா வாயை அடைக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள். அவர்கள் பொய்யை பரப்புகின்றனர். இதனை மக்கள் நம்புகின்றனர். நாம் அவர்களை தடுப்போம்." என்று திக்விஜய் சிங் பேசியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் தலைநகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியான பாராளுமன்றம் மற்றும் பிற அரசு அலுவலங்களுக்கு செல்லும் சாலையில் இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனை அடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த சிறிய தடியடி நடத்தினர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.


No comments:

Post a Comment