Saturday, September 27, 2014

மராட்டிய சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 6 ஆயிரத்து 42 பேர் மனு செய்தனர்

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 25 ஆண்டு கால சிவசேனா – பா.ஜனதா கூட்டணியும், 15 ஆண்டுகால காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தன. இதையடுத்து, அந்த கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்தும் தேர்தலை சந்திக்கிறது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் முக்தி, பாரிபா பகுஜன் மகாசங் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. மேலும் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


No comments:

Post a Comment