அரியானா முதல் மந்திரி பூபிந்தசிங் ஹூடா, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் கலந்து கொள்ள கடந்த சில தினங்களுக்கு முன் மறுத்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவானும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நாக்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மோடி கலந்துகொள்ள உள்ள இந்த விழாவில் மகாராஷ்டிரா முதல்மந்திரி பிரித்விராஜ் சவான் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பிரதமர் மோடி கடந்த முறை வருகை தந்த போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறேன் என்று பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கூட்டாட்சி அமைப்பு காயப்படுத்தப்படுகிறது. ஹூடாவும் இந்த முடிவைத்தான் எடுத்தார். சோலாப்பூரில் நடைபெற்ற விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
No comments:
Post a Comment