Thursday, August 21, 2014

ஐரோம் ஷர்மிளா உடல்நிலையை பரிசோதித்து கொள்ள மறுப்பு: மீண்டும் கைதாகிறார்?

கடந்த 2000–ம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே மலோம் என்னும் கிராமத்தில் நடந்த என்கவுண்டரில் 10 பேரை ஆயுதப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு கண்டனம் தெரிவித்தும், மணிப்பூரில் ஆயுதப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை திரும்பப்பெற கோரியும் அந்த ஆண்டு முதல் சமூக சேவகி இரோம் சானு சர்மிளா உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை தொடங்கியபோது சர்மிளாவுக்கு வயது 28. இப்போது அவருக்கு 42 வயதாகிறது.தொடர்ந்து வருடத்தின் 365 நாட்களும் அவர் உண்ணாவிரதம் இருந்து வந்ததால் சர்மிளா மீது மணிப்பூர் போலீசார் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வந்தனர்.


No comments:

Post a Comment