Thursday, August 21, 2014

லஞ்சம் ஒரு நோய் மற்றும் பாவ காரியம்’ நரேந்திர மோடி பேச்சு

மராட்டிய மாநிலம் மவுடாவில் 1000 மெகாவாட் சூப்பர் பவர் அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், ‘‘லஞ்சம் இந்த நாட்டை அழித்துவிடும். சிலருக்கு இது ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. இந்த நோய் ஒழிக்கப்பட வேண்டும். இந்த பாவ காரியத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும்’’ என்றார்.இந்த விழாவை மராட்டிய முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவாண் புறக்கணித்தார். முன்னதாக சோலாப்பூரில் நடந்த தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழாவில் அவர் பேசும்போது மோடியை வாழ்த்தி கூட்டத்தினர் தொடர்ந்து கோஷம் போட்டதால் பாதியிலேயே பேச்சை நிறுத்தினார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர், இதன் காரணமாகவே மின்நிலைய விழாவை புறக்கணித்தார். ஆனாலும் மாநில கவர்னர் கே.சங்கர நாராயணன் இதில் கலந்து கொண்டார்.


No comments:

Post a Comment