Thursday, August 21, 2014

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது. பாகிஸ்தான் ராணுவதித்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ் புரா பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் காயம் அடைந்தாக தகவல்கள் கூறுகின்றன.


No comments:

Post a Comment