Thursday, August 21, 2014

சுஷ்மா சுவராஜூடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

இலங்கையில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் பகுதியில் இன்னும் ராணுவம் உள்ளது. அதை இலங்கை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. என்றாலும் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழர்களின் துயரம் இன்னும் தீரவில்லை. போர்க்குற்றம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த சர்வதேச குழுவை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும், அந்த குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இந்த நிலையில், இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் பிரநிதிகள் குழுவினர் 5 பேர், இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லி வந்தனர். அவர்கள் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கையில் 13 வது சட்ட திருத்தம் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகவுள்ளது.


No comments:

Post a Comment