Wednesday, August 20, 2014

துணைகண்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதே பாகிஸ்தானின் கொள்கை:பாகிஸ்தான் துணைத்தூதர் அப்துல் பாஷித் பேட்டி

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயேன வெளியுறவு செயலாளர்க்ள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் முதல் முறையாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தெற்காசியாவியில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. தீவிரவாதத்தை துடைத்தெறியும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதத்தால் இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. தீவிரவாதத்துக்கு இதுவரை 15 ஆயிரம் பேரை பாகிஸ்தான் பலி கொடுத்துள்ளது.


No comments:

Post a Comment