Tuesday, August 19, 2014

யோகா குரு பி.கேஎஸ் ஐயங்கார் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

யோகா குரு பிகேஎஸ் ஐயங்கார் இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 96 வயதுடைய யோகா குரு ஐயங்கார் இதய மற்றும் சுவாச கோளாறு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகாகுரு பிகேஎஸ் ஐயங்கார்,1991 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது மற்றும் 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். யோகா கலை பற்றி ஏராளமான புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்


No comments:

Post a Comment