Tuesday, August 19, 2014

இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிசூடு: இந்திய ராணுவம் பதிலடி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. என்றாலும் பாகிஸ்தான் ராணுவம் அதை மதித்து நடப்பது இல்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், 12 மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேற்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பூஞ்ச் பகுதியின் ஹமிர்பூர் பகுதியில் அத்துமிறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.


No comments:

Post a Comment