பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைதள பக்கத்தில், ‘‘திட்டக்குழுவுக்கு பதிலாக மாற்று அமைப்பை ஏற்படுத்த விரும்புகிறேன். அந்த அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்’’ என்று கூறி இருக்கிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘திட்டக்குழுவை அகற்றிவிட்டு வேறு அமைப்பை ஏற்படுத்தினால் நாட்டிற்கு அதிக செலவு ஏற்படும். மேலும், நிதி சார்ந்த விவகாரங்களை தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment