Tuesday, August 19, 2014

தமிழக–இலங்கை மீனவர் பிரச்சினை பற்றி இன்று ஆலோசனை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு

இந்திய–இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.இந்த கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தலைமை தாங்குகிறார். மத்திய வேளாண்மை, உள்துறை, வெளியுறவு ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். சட்டவிரோதமாக மீன் பிடிப்பது, தமிழக மீனவர் நலன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இத்தகவலை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment