Friday, August 1, 2014

சோனியாவும் ராகுலும் இரண்டு ஆண்டுகள் கட்சி பணியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற பிராரின் கருத்துக்கு மனிஷ் திவாரி பதில்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்து எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட இந்த படுதோல்விக்கு பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் காரியக்கமிட்டி உறுப்பினரும், அகில இந்திய பொதுச் செலயாளர்களில் ஒருவருமான ஜக்மித்பிரார் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக நேற்று விமர்சித்தார். அவர் கூறுகையில், பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பு ஏற்று சோனியா, ராகுல் இருவரும் அவர்களது ஆதரவாளர்களும் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். காங்கிரஸ் தலைவர் பதவியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, சோனியா 2 ஆண்டுகளாவது பதவியை துறந்து இருப்பது நல்லது. சோனியா, ராகுல் இருவரும் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து சற்று விலகி இருப்பதால் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடப் போவதில்லை. மாறாக புதிய உத்வேகம் கிடைக்கும்.அதன்பிறகு சோனியா, ராகுல் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடலாம். இப்படி செய்தால்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சோனியா, ராகுல் மீது நம்பிக்கை பிறக்கும


No comments:

Post a Comment