கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே உள்ள எல்லூர் கிராமத்தில் மராட்டிய மாநிலம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு, கர்நாடகா போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மராத்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை தகராறு ஏற்பட்டது. இதனிடையே, சர்ச்சைக்குரிய பகுதியில் மராத்தி மொழி பள்ளிக்கூடம் ஒன்றை மராட்டிய அரசு கட்டிவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த பள்ளிக்கூட கட்டுமான பணியை தடுத்து நிறுத்துமாறு மனுவில் வலியுறுத்தியது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆ.எம்.லோதா, இந்த விவகாரம் குறித்து 6 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment