மும்பை, போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக சிறப்பு சி.பி.ஐ.கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. போலி என்கவுண்டர் குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே முக்கிய குற்றவாளி ஷோராபுத்தீன் மற்றும் அவரது மனைவி கவுசர் ஆகியோர் கடந்த 2005–ம் ஆண்டு நவம்பர் மாதம் போலி என்கவுண்டரின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு முக்கிய சாட்சியாக இருந்த துல்சிராம் பிரஜாபதியும் அதன்பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரும் போலி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு சம்பவங்களிலும் குஜராத்தின் அப்போதைய மந்திரி அமித் ஷாவுக்கு (தற்போதைய பா.ஜனதா தேசிய தலைவர்) தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேரில் ஆஜராக விலக்கு இதனை தொடர்ந்து, போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 38 பேரை குற்றவாளிகளை சேர்த்தனர். இந்த வழக்கு மு
No comments:
Post a Comment