Friday, August 1, 2014

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நாடு முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அமைப்பிடம் தங்களது கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும். அதன் பின்னர், அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியுடன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த மாதம்(ஜூலை) 15–ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நடந்தது.


No comments:

Post a Comment